Wednesday, 3 May 2023

Tamil new.Part1

கீச்சுக்குரலின் நீல நிற பக்கங்கள்-
பகுதி I           கீச்சுக்குரலின் நீல நிற பக்கங்கள்- -                                               பக்கம் 1-9
பகுதி II        மகரக்கட்டு மருத்துவத்திற்கு புதிய கண்டுபிடிப்பு           பக்கம்1-8
பகுதிIII       கீச்சுக்குரல் மாற்றத்தின் நன்மைகள்.                                      பக்கம் 1-4

பகுதி IV        பாலியல் மெய்யும் பொய்யும்                                           பக்கம் 1-20
 பகுதி v         பாலியியல் கல்வி

                                                    முன்னுரை
தமிழக வரலாற்றில் பண்பாட்டுக்கு முரண்பட்ட மறச் செயல்களை முதன்முறையாக மறுத்த நூல் திருக்குறள் என்பது குறிப்பிடத்தக்கது. அகப்பொருளைக் கூறும் காமத்துப்பாலில் கூட வள்ளுவரது அறம் இழைந்தோடுவது மிகவும் தெய்வீகத் தன்மை வாய்ந்தது என்றும் இதுபோன்ற தன்மையே குறளை மற்ற அறநூல்களிலிருந்து வேறுபடுத்துகிறது. நமது இந்திய திரு நாட்டின் பண்பாடோடு கீச்சுக்குரல் (மகரக்கட்டு பியூபர்போனியா/ puberphonia) பாலியல் போதிக்க பட வேண்டும். அதுபோல் அயல் நாட்டில் எதையும் அனுபவி என்ற நிலையில் புபர் போனியா பாலியல் முறையற்ற வழியில் பார்க்க, ரசிக்க, அனுபவிக்கபடுகிறது என்ற நிலைமை மாறி கீச்சுக்குரல் இளைஞன் பற்றி மறு நோக்கம் தேவை, நமது ஆய்வு வரவேற்கப்பட வேண்டும். கீச்சுக்குரல் இளைஞன் பற்றி சரியான புரிதல் வேண்டும். நமது மருத்துவர்களுக்கு கீச்சுக்குரல் இளைஞன் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என எண்ணம் இருக்கிறது அது போல் நம்ம ஊர் இறை வடிவான அரவணனைப்பற்றியும் தெரியவேண்டும். தெரிந்து ஆய்வு செய்யவும் வேண்டும். சமூகத்துடன் வாழத் தங்கள் அசல் பாலின அடையாளத்திற்கு விரும்பும் கீச்சுக்குரல் இளைஞன் குரலை மாற்ற வேண்டும் என்ற வலுவான ஆசை எங்களுக்கு உள்ளது. கீச்சுக்குரல் இளைஞன் வாழ்வதற்கும், சமூகத்தில் ஒன்றிணைவதற்கும், பொது விழிப்புணர்வு குறைவாக இருப்பதற்கான முக்கிய காரணத்தைக் கண்டறிந்து, தற்போதைய சூழ்நிலையைப் பற்றி விவாதித்து, அவர்களிடையே உள்ள களங்கத்தைக் குறைப்பதற்கான சாத்தியமான தீர்வை வழங்குவது இந்த புத்தகத்தின் நோக்கம். ENT அறுவை சிகிச்சை நிபுணர்கள், பேச்சு நோயியல் நிபுணர், மிமிக்ரி கலைஞர்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி தெரபிஸ்ட், உளவியலாளர், பாலியல் கல்வி மற்றும் பெற்றோருக்குரிய ஆலோசகர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சிகளை இந்த ஆய்வுக் கட்டுரை விவரிக்கிறது.
பாலியல் தமிழ் மரபில் ஆபாசமாக, மறைக்கப்பட வேண்டியதாக ஒரு காலமும் இருந்ததில்லை. மனித உடல் பிரபஞ்சத்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. எனவே மனித உடலை உருவாக்கும் பாலியல் சக்தி மூலாதார சக்தி எனவும் பிரம்மத்தின் செயல் எனவும் தாந்திரீக மரபில் கருதப்பட்டது. கோவில்களில் ஆபாசச் சிலைகள் மட்டுமல்ல எல்லாவிதமான சிலைகளும் உள்ளன. மனித வாழ்க்கையைப் பேசும் சிலைகள் அவை. இவற்றில் உடலுறவுச் சிலைகளும் பாலியல் சார்ந்த சிலைகளும் அடக்கம். சிலைகளெல்லாம் குறியீட்டு முறைகளிலானவை. பக்தி மேலோங்கியபோது நாம் அக்குறியீடுகள் பற்றி யோசிப்பதில்லை.
இச்சிலைகளெல்லாம் சாக்த மரபிலிருந்து வந்தவை. சாக்தம் பிரபஞ்ச ஆற்றலை பெண்ணாக உருவாக்கியது. அதையே சக்தி என்கிறோம். எனவே பெற்றெடுத்தலும் பாலூட்டலும் ஆதார சக்தி. நான் எழுதியவை பல்வேறு காலகட்டங்களில் நான் புத்தகங்களிலிருந்தும் சில அறிஞர்களிடமிருந்தும் பெற்றவை. நினைவிலிருந்து ஓரளவிற்குத் தொகுத்து எழுதியிருக்கிறேன். எனவே சில தவறுகள் இருக்கக்கூடும்.
பகுதி I      கீச்சுக்குரலின் நீல நிற பக்கங்கள்- -       பக்கம் 1
900,000 பேரில் ஒருவருக்கு ஆண் கீச்சுக்குரல் பிரச்சனை, பருவமடைதல் தொனிபாதிப்பு இருப்பதாக 1995 ல் மதிப்பிடப்பட்டுள்ளது. 2023 ல் எங்களது ஆய்வில் 1000 ஆண்களில் ஒருவர்க்கு இருப்பதாக கணக்கிட்டுள்ளோம். அதுமட்டுமல்ல 5 நாள்களில் எவ்வித அறுவை மற்றும் மருந்தின்றி எங்களது எளிய பயிற்சியின் மூலம் சரியும் செய்து விடலாம். 
கீச்சுக்குரல் (மகரக்கட்டு பியூபர்போனியா/ puberphonia), ஆணுக்கு பண்பாட்டுக்கு முரண்பட்ட பாலியல் செயல்களை உருவாக்குகிறது. கீச்சுக்குரல் ஆண் அடையாளத்தை மாற்றுகிறது, கீச்சுக்குரல் பிரச்சனையை சரி செய்து விட்டால் அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்.
பருவமடையும் சிறுவனுக்கு கீச்சுக்குரல் இருந்தால் அவனை ஒருவரும் ஆணாக ஏற்றுக்கொள்வதில்லை.
ஒரு குழந்தையோ அல்லது விடலைப்பருவ (டீன் ஏஜ்) பையனோ ஆணாக இருந்து பெண்ணாக மாறாது. உண்மையான பிறப்புறுப்பு, அதாவது ஆணுக்கு ஆண் பிறப்புறுப்பு தான் இருக்கும். எதிர் பாலினத்தவருக்கான, அதாவது ஆணுக்கு பெண் உறுப்பு இருக்காது. XY  குரோமோசோம்கள் எப்போதும் XY குரோமோசோம்களாக இருக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 குரோமோசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23, தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமோசோமே முடிவு செய்கிறது. தாயிடம் xx குரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட குரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது. 2,000 குழந்தைகளில் 1 குழந்தை (0.05% குழந்தைகள்) பிறப்புறுப்பு மாறுபாடுகளுடன் பிறக்கிறது. இன்டர்செக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பல குழந்தைகள் பாலின உடற்கூறியல் மாறுபாடுகளின் வடிவங்களுடன் பிறக்கின்றன. அவை போன்று  பிற்கால வாழ்க்கையில் பாலின உடற்கூறியல் மாறாது,தோன்றாது. கீச்சுக்குரல், ஆணுக்கு பெண்போன்று பாலின உடற்கூறியல் உருவாகாது மட்டுமல்ல உலகத்தில் உள்ள அத்தனை ஜீவன்களிலும் பருவம் அடையும் பொது பாலின உறுப்புகள் ஆண் பெண்ணாகவோ, பெண் ஆணாகவோ மாறாது. ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் ஒப்பனை செய்து நடிக்கலாம்.
விடலைப்பருவ (டீன் ஏஜ்) பையனோ விடலைப்பருவ குரல் உடைந்து காளையாக மாறி  மற்ற பெண்களின் உருவத்தை வெறித்தனமாகப் பார்க்கத் தொடங்குகிறார்கள், ஆண் இளம் மனம்  ஒரு புதிய, சிறந்த அனுபவத்தை  தேடத் தீவிரமாக (ஒருவேளை அறியாமலேயே) தொடங்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். எனவே அவர்கள் ஆண்  என்ற புதிய அடையாளத்தை தீவிரமாக விரும்புகிறார்கள்.
கீச்சிக்குரல் மாந்தரின் பாலியல் அறிதல், வருங்கால இளைஞர்களுக்கு முக்கியமானது
மக்கள்தொகையில் சுமார் 1% மக்கள்   வித்தியாசமான முறையில் பேசுகிறார்கள்.  அதில் ஒரு பிரச்சனை ஆண்கள் பருவம் அடைந்தும் பேசும் குரல் உடையாமல் பெண்குரல் போன்று இருத்தல் ஆகும். உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் கீச்சுக்குரல் பிரச்சனையை அலட்சியப் படுத்துகிறார்கள், நீங்கள் வளரும்போது அது தானாகவே குணமாகும் - இது கடந்து செல்லும் கட்டம்' என்று நினைப்பது வியக்க வைக்கிறது. குணப்படுத்த முடியாதது என்பதல்ல, ஒருவருடைய வாழ்க்கையின் பல பொற்காலங்கள் ஒரு கனவாக மாறும். இந்த நேரம் திரும்ப வராது, அதை ஈடுகட்ட வழியில்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஆரம்ப காலக்கட்டம் - பள்ளி வாழ்க்கை, இளமைப் பருவம், கல்லூரி வாழ்க்கை மற்றும் என பல நிலைகள் உள்ளன. ஒரு பிரகாசமான வாழ்க்கை மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஒருவரின் ஆளுமை, திறமை மற்றும் பிற அத்தியாவசிய குணங்களை உருவாக்குவதற்கான கட்டங்களாகும். ஆனால் அந்த முக்கியமான காலக்கட்டங்களில், ஒருவர் தனிமையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், மக்களைத் தவிர்த்து, மற்ற எல்லா சுய-தோல்வி நடத்தைகளிலும் ஈடுபட்டால், அது இயற்கையாகவே ஒருவரின் வாழ்க்கையில் வெற்றியையும் சாதனையையும் பாதிக்கிறது. உங்கள் பேச்சின் இந்த முக்கிய சிக்கலை சமாளிக்க உடனடியாக செயல்படுங்கள்.             
ஆண்கள் எப்போது வயதுக்கு வருகிறார்கள்? அதன் அறிகுறிகள் என்னென்ன? 
பெண் குழந்தைகள் பருவமடைவதைப் போலவே ஆண் குழந்தைகளும் பருவமடைகின்றனர். ஆண்களின் உடலிலும் பருவமடையும் போது பல மாற்றங்கள் தென்படுகிறது. இந்த மாற்றங்கள் சாதாரணமானது என்பது ஆண் குழந்தைகளுக்கு தெரிவதில்லை. பெற்றோர்களும் இது குறித்து வெளிப்படையாக பேச முற்படுவதில்லை. 
எந்த மாதிரியான மாற்றங்கள் உண்டாகிறது வாங்க தெரிஞ்சுக்கலாம்
. பெண் தன் உடலில், மனதில் ஏற்படும் மாற்றத்ததை அம்மாவிடம் தைரியமாக கூறி விடுவாள். ஆண் கூறமாட்டான்.
பருவமடைதல் அல்லது வயதுக்கு வருதல் என்றால் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு என்று தான் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் ஆண் குழந்தைகளும் வயதுக்கு வருகிறார்கள் என்பது தெரியுமா? 
ஒரு பெண் பருவமடையும் போது உடம்பில் சில மாற்றங்கள் தென்படும். பெண்ணின் உடலானது மென்மையாக ஆரம்பிக்கும் மெருகேறும், தட்டையான மார்பகங்களில் மாற்றங்கள் நிகழும். முதல் மாதவிடாய் ஆரம்பம் ஆகும். இதெல்லாம் பெண்கள் பருவமடையும் போது உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள். அதே மாதிரி ஒரு ஆண் பருவமடையும் போதும் தன்னுள் பல மாற்றங்களை அறிகிறான். இது ஒரு நாளிலேயே ஏற்படும் மாற்றங்கள் கிடையாது. படிப்படியாக அவனது உடம்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. உடம்பு வலிமை பெறும், குரல் விரிசலடைகிறது, பாலியல் முதிர்ச்சி உண்டாகும், உடம்பில் ஏனைய இடங்களில் முடி வளர்ச்சி ஏற்பட ஆரம்பிக்கும். கிட்டத்தட்ட 9 முதல் 14 வயது வரையில் இந்த மாற்றங்கள் உண்டாகிறது.
ஆண் குழந்தைகள் பருவமடைதலின் அறிகுறிகள்
ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளைப் போல் உடனே பருவமடைவது கிடையாது. அவர்கள் படிப்படியாக மாற்றங்களை பெற ஆரம்பிக்கின்றனர். சில ஆண் குழந்தைகள் மற்ற ஆண் குழந்தைகளை விட சீக்கிரமே முதிர்ச்சி அடைகின்றனர். அவனது உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் சங்கடத்தை உண்டு பண்ணும். ஆண் குழந்தைகள் இதை மறைக்க முற்படுவார்கள். தனிப்பட்ட ஒரு விஷயமாக அவர்கள் நினைப்பார்கள்.
உடம்பு வடிவமைப்பில் மாற்றம்
வெளிப்புறமாக உங்க குழந்தை வளர்ச்சி அடைவதை நீங்கள் காணலாம். உண்மையில் ஆண் குழந்தைகள் பருவமடையும் போது கை மற்றும் கால்களில் எடை போடும், 13,14 வயதில் அவனுடைய உயரம், தோள்கள் எல்லாம் விரிவடைய ஆரம்பிக்கும். தசைகள் எல்லாம் வளர்ந்து புஜங்களை கொண்டு வலிமையாக ஆரம்பிப்பான். இந்த கட்டுக்கோப்பான உடலமைப்பை உடற்பயிற்சி செய்வதன் மூலம் அவர்களால் பராமரிக்க முடியும். தோள்பட்டை முன்பை விட விரிவடைந்து காணப்படும். இடுப்பு தசைகள் வலிமை பெற ஆரம்பிக்கும். தோள்பட்டை, இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியின் தோல்கள் தடிமனாக ஆரம்பிக்கும். இந்த உடல் மாற்றங்களெல்லாம் ஏற்படுகிற பொழுது, ஆண் பருவமடைதலுக்குத் தயாராகிறான் என்று அர்த்தம்.
வியர்வை, முடி வளர்ச்சி மற்றும் பருக்கள் வர ஆரம்பிக்கும்
ஆண் குழந்தைகள் பருவமடைய ஆரம்பிக்கும் போது அதிக வியர்வை மற்றும் உடல் துர்நாற்றத்தை சந்திப்பார்கள். இதனால் அவர்கள் அடிக்கடி குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டியிருக்கும். முகத்தில் தாடி, மீசை வளர ஆரம்பிக்கும். ஷேவிங் செய்ய முற்படுவார்கள். பருவமடையும் போது சுரக்கும் ஹார்மோன்களால் தோலில் அதிக எண்ணெய் பசை சுரக்கும். இதனால் முகத்தில் முகப்பரு தோன்ற ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் அவர்களுக்கு சரும பராமரிப்பு அவசியமாகிறது. முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும் சிலருக்கு கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் பருக்கள் அதிகம் உண்டாகும். சிறுவர்களுக்கு வியர்வை அதிகமாக வருவதென்பது, பருவ கால மாற்றம் மட்டுமல்ல, அவர்கள் பருவமடைவதற்கான அறிகுறியும் தான் என்பைதை உணருங்கள்.
ஆணுறுப்பு வளர்ச்சியடைதல்
பருவமடைதலின் முதல் அறிகுறியாக ஆண் குழந்தைகளின் ஆணுறுப்பு வளர்ச்சியடைய தொடங்கும். விந்தணுப்பை இவற்றில் இருமடங்கு வளர்ச்சி அதிகமாகும். அதே மாதிரி அந்தரங்க பகுதியில் முடிகள் வளரத் தொடங்கும்.  ஆண் குழந்தைகள் தங்களின் ஆண் குறிகளின் மீது சிறிய புடைப்புகள் அல்லது பருக்களை பெறுகின்றனர். இப்படி காணப்படுவது இயல்பானது இதனால் பாதிப்புகள் எதுவும் கிடையாது என்கிறார்கள் மருத்துவர்கள்.இரவு விந்தணுக்கள் வெளியேற்றம் மற்றும் விறைப்புத்தன்மை உண்டாக ஆரம்பிக்கும்.இரவில் தூங்கும் போது ஆண் குழந்தைகளுக்கு விந்தணுக்கள் வெளியேறி ஈரமாகக் கூடும். இது சாதாரணமான ஒரு விஷயம். பாலியல் எண்ணம் இல்லாமல் கூட இந்த மாதிரி ஏற்படலாம். எனவே இது குறித்து உங்க ஆண் குழந்தைகள் பயப்பட வாய்ப்புள்ளது. இது ஒரு சாதாரண விஷயம் என்றும் பருவமடையும் போது இந்த மாதிரி மாற்றங்கள் உண்டாகும் என்பதையும் அவருக்கு தெரியப்படுத்தி உதவி செய்யலாம். ஆண் பருவமடையும் போது தன்னிச்சையான விறைப்புத்தன்மையும் உண்டாகும். இந்த விறைப்புத்தன்மை பிரச்சனை எந்த நேரத்திலும் உண்டாகலாம். இதை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் சில காலங்கள் கழித்து சரியாகி விடும் என்பதையும் அவருக்கு தெரியப்படுத்துங்கள்.
குரலில் மாற்றம் உண்டாதல்
ஒரு ஆண் பருவமடையும் போது அவனது குரலிலும் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். அவனது குரல் வளையும், குரல் அறைகளும் கணக்க ஆரம்பிக்கும். கணத்த குரலை பெற ஆரம்பிப்பார்கள். இந்த மாற்றங்கள் கூட ஆண் குழந்தைகளை சங்கடமாக உணர வைக்கும். எனவே இது பொதுவான விஷயம் என்பதை அவருக்கு தெரியப்படுத்துங்கள்.அதுவரையிலும் இருந்த மெல்லிய, சிறுபிள்ளைத்தனமான குரல் உடைந்து, அடிக்குரல் உடைய ஆரம்பிக்கும். குரலில் ஒரு வலிமையும் கம்பீரமும் தோன்ற ஆரம்பிக்கும்.. அதே நேரத்தில் பருவமடைதல் தொடர்பான மாற்றங்கள் நிகழ்கின்றன.  இந்த கீச்சுக்குரல் கோளாறு பொதுவாக பிற உடம்பு  கோளாறுகள் இல்லாத நிலையில் ஏற்படுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறுவர்களாக இருக்கும் போது பெண் குரலே இருக்கும். ஆண் விடலைப் பருவத்தில் குரல் உடைகிறது. பெண் குரலே சிலருக்கு தொடர்ந்து காணப்படும்.  வயதாகும் போது    இக்குரல் மாறுவது கிடையாது .பெண்மை குரலுடைய ஆண்கள், தனது அனைத்து உறுப்புகளும் நன்றாகவும் திறமையாகவும் இருப்பினும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.  இக்கீச்சிக்குரல் உடைய ஆண்களை பெண்களும், பொதுமக்களும் பேடி என்பதுபோல் தவறாக எண்ணுகிறார்கள் .ஒரு சிலர் மன விரக்தியால் வாழ்வை பாழாக்கிக் கொள்கிறார்கள். ஆறா நெருக்கீட்டினால் மன வடு ஏற்படுகிறது.
பருவமடையும் போது, ஆண், பெண் குரல்வளையில் ஏற்படும் மாற்றங்கள்:
பொதுவாக ஆண்களில் சுருதி குறைகிறது.  பெண்ணின் அடிப்படை அதிர்வெண் (சுருதி)  165 முதல் 255 ஹெர்ட்ஸ் வரையிலும், வயது வந்த ஆண் 85 முதல் 180 ஹெர்ட்ஸ் (hertz) வரையிலும் இருக்கும்.  பருவமடையும் போது ஆண்களில் குரல்வளை கணிசமாக பெரிதாக வளர்கிறது. இதனால் பெரும்பாலும் கழுத்தில் ஆதாமின் ஆப்பிள் (adams  apple)  என்ற குருத்து எலும்பு   தெரியும். இந்த மாற்றங்கள் இளம்பருவ ஆண்களின் குரல் சிறப்பியல்புகளை ஆழப்படுத்த பங்களிக்கின்றன. குரல் முக்கியத்துவம் பெறுகிறது.  
கீச்சுக்குரல் ஏற்பட்டு வாழ்வு பாழவத்திற்கான கரணங்கள், மனித மாற்றங்கள். 
1.தனிமை +தனிமையாக இருப்பதற்கு தள்ளுவது.
2.அம்மாவின் பாசம்/அரவணைப்பையே சார்ந்திருத்தல்.
3.ஒப்பார் குழுவின் ஆதிக்கம் /ஒத்துழைப்பு இல்லாதிருத்தல்.
4.ஆளுமையை செயல்படுத்துவதில் தோல்வி.
5.பாலியல் பற்றிய குழப்பங்கள் /ஓரினச் சேர்கையாளராகவோ (அ)திருநங்கையாக நடத்துவது. 
6.உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் 
7.மன ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் 
8.நடத்தையில் ஏற்படும் பிரச்சனைகள்

மனநிலையில் மாற்றம் உண்டாதல்

இயக்குநீர் அல்லது ஹார்மோன் மாற்றங்களால் ஆண் குழந்தைகளும் மனநிலையில் மாற்றங்களை காண்பார்கள். உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான மாற்றங்களை அவர்கள் சந்திக்க நேரிடும். இதுவும் கடந்து போகும் என்று அவர்களுக்கு பொறுமையாக புரிய வையுங்கள்.
 பருவமடைதல் குறித்து எப்படி பேசுவது
ஆண் குழந்தைகள் பருவமடைய ஆரம்பித்ததும் பெற்றோர்களிடம் குறைவாக பேச ஆரம்பிப்பார்கள். டீன் ஏஜ் வயதில் கொஞ்சம் விலகி இருப்பார்கள். இது சாதாரண விஷயம் என்பதை பெற்றோர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும் ஒரு தாய் பெண் குழந்தைகள் பருவமடையும் போது பேசுவது மாதிரி ஆண் குழந்தைகளுக்கு யாரும் பேசுவதில்லை. ஆண் குழந்தைகளும் டீன் ஏஜ் வயதில் நிறைய மனநிலை மாற்றங்கள் பயம் இவற்றை கொண்டுள்ளனர். எனவே பெற்றோர்கள் இது குறித்து ஆண் குழந்தைகளிடம் வெளிப்படையாக பேச முற்பட வேண்டும். எனவே உங்க ஆண் குழந்தையின் உடல் மாற்றங்களை எடுத்துக் கூறி அவருக்கு புரிய வையுங்கள். இது பொதுவான விஷயம் என்று எடுத்துக் கூறுங்கள்.
 நீங்கள் பிறந்த பாலினத்தின் வடிவங்கள் தான் எப்போதும் இருக்கும். 
ஆணாக பிறந்த ஒருவருக்கு இடையில் பெண் உறுப்பு தோன் றுவது கிடையவே கிடையாது. ஆனால் மனநிலையில் மட்டும் பெண்ணாக இருக்க முடியம். அதுவும் மாற்றவர்களின் /ஓப்பார்( peer pressure) குழுவின் வற்புறுத்தலினால் தான் மனம் மாறி  நடிக்கிறார்கள் . நாளாவட்டத்தில் அதுவே வாழ்க்கை ஆகிவிடுகிறது. ஒரு சகா மாந்தர் என்பது உங்கள் வயது மட்டத்தில் உள்ள ஒருவர். நீங்கள் 10 ஆம் வகுப்பு படித்தவராக இருந்தால், மற்ற உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உங்கள் சகாக்கள். பியர் என்பது லத்தீன் par என்பதிலிருந்து வந்தது, அதாவது சமம். நீங்கள் ஒருவருக்கு இணையாக இருக்கும்போது, நீங்கள் அவர்களின் சகா. நீங்கள் செய்ய விரும்பாத ஒன்றைச் செய்ய உங்கள் வயது மாணவர்கள் உங்களை வற்புறுத்துகிறார்கள் என்றால், அது சகாக்களின் அழுத்தம். சகாக்களின் அழுத்தம் பதின்ம வயதினரை வெகு சுலபமாக பாதிக்கும்.இது தன்னம்பிக்கையைக் குறைத்து, மோசமான செயல்பாட்டிற்கு வழிவகுக்கும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகுதல் அல்லது மனச்சோர்வு மற்றும் பதட்டம் அதிகரிக்கும். இதை தடுக்காவிட்டால், சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால்,  இறுதியில் பதின்ம வயதினரை சுய-தீங்கில் ஈடுபட வழிவகுக்கும்.
 ஆனால் ஆணாக பிறந்த ஒருவர், ஒரு பெண் உறுப்புடன் இருக்க முடியாது. பருவக் குரல் உடையா ஆணுக்கு, பெண்மை தன்மை உடைய குரல்வளை மற்றும் பாலியல் தன்மை இருக்குமோ என்று அதற்கான மருத்துவத்தைதான் செய்ய முயற்சிக்கிறார்கள். பெரும்பாலும் ஹார்மோன் சிகிச்சை மூலம் போதுமான குரல் மாற்றத்தை அடைவதில்லை.  இதனால்  குரல் மாறுவது கிடையாது. அதனால் பலர் திருப்தி அடையாமல் சிகிச்சையை விட்டு விடுக்கிறார்கள்.
கீச்சுக்குரல் பதின்ம வயது இளைஞன் பாலியல் ரீதியாக மனநிலையில் மாறுகிறார்கள். 
ஆபாசப் படங்கள் மிகவும் பொதுவானதாகவும் வெளிப்படையாகவும் உள்ளது. இளைஞனுக்கு அதிக பாலியல் நாட்டம் ஏற்படுகிறது பெண்ணை விட உலகில் எதுவும் பிரபலமாக தெரியவில்லை. இளைஞனுக்கு அந்த பாலுணர்வை இன்னும் புரியாத நிலைமை. எண்ணங்கள் கூடுகிறது. இணையம், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் எல்லோரும் ஒரு அழகான பெண்ணை நேசிக்கிறார்கள் என்று பார்க்கிறான். பருவமடைந்த கீச்சுக்குரல் சிறுவனை யாருமே அவனை ஆணாக ஏற்றுக்கொள்ளவில்லை, எனவே அவர் மற்ற பெண்களின் உருவத்தை வெறித்தனமாகப் பார்க்கத் தொடங்குகிறான். பின்னர் தன்னைப் பெண்மையாக்குவதில் பரிசோதனை செய்யத் தொடங்குகிறான். பெண்களைப் போல் அடிக்கடி கனவு காண்கிறான். புது வழக்கத்திற்கு மாறான ஈர்ப்பு ஏற்படுகிறது. மற்றும் சம்பிரதாயமான தப்பிக்கும் தன்மையை ஏற்படுகிறது. ஒரு பெண்ணைப் போல உடை அணிந்த பிறகு, அவர் இப்படி ஊர் சுற்றி வருவார். தவறான உடலில் சிக்கிக் கொள்கிறார்கள் அல்லது அதற்குப் பதிலாக வேறொரு பாலினத்தில் இருப்பது நல்லது என்ற மாயயை சமூகம் வழங்குகிறது. நாம் நேர்மறையான கீச்சுக்குரல் இளைஞனுக்கு குரலை வலுப்படுத்தி ஆண் குரலைக் கொடுக்க வேண்டும், மற்றும் அவர்களின் உயிரியலை ஏற்றுக்கொண்டு மேதாவிகளாக அவர்களை இக்கிச்சுக் குரலிலேயே நீ வாழ்வில் முன்னேறி விடலாம் என்று ஆலோசனை கூறக்கூடாது, ஊக்குவிக்கக் கூடாது. அவர்கள் ஒருபோதும் ஆலோசனை (கவுன்சிலிங்கை) விரும்பவில்லை. அவர்களுக்கு பரிகாரம் வேண்டும். ஒரு கீச்சுக்குரல் இளைஞன் பாலின குரல் மாற்றத்தில் பருவ வயதில் இருக்கும் பொது, ஒரு பெரிய வாழ்க்கை மாற்றத்துடன் வரும் இளைஞன் அனைத்து மன அழுத்தத்தையும் ஏற்றுக் கொள்கிறான். பல ஆண்கள் தங்கள் குரல்களின் பாலின கீச்சுக்குரல் அளவை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளுவது இல்லை. தைரியமாக துணித்து கீச்சுக்குரலில் பேசும்போது ஒருவரும் ஒரு குறையாக எடுத்துக்கொள்வதில்லை. பலருக்கு கீச்சுக்குரல் ஓர் நல்லதொரு அடையாளமாக மாறுகிறது. கீச்சுக்குரலோடு சந்தோசமான வாழ்க்கை நடத்துகிறார்கள் . ஆனால் ஒருசிலர் தவறாக அடையாளம் காணப்பட்டால், சமூக தனிமைப்படுத்தல் குறித்த பயம் பொதுவான பிரச்சனைகளாக அவனின் உள் உருவாகும். 
கீச்சுக்குரலால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் பள்ளியிலும் உறவினர்களாலும் அண்டை வீட்டாராலும் எளிதில் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்
 பெரும்பாலும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் அந்த இளைஞன் குடும்ப உறுப்பினராகவோ அவரது உறவினராகவோ அல்லது குடும்பத்துக்கு நெருக்கமானவராகவோ இருக்கலாம். ஒரு பருவவயது சிறுவனை பாலியல் ரீதியாக சாதாரணமாக தீண்ட முடியுமா? தீண்டத்தான் மனம் வருமா!!! அவனுக்கு, ஆடவனுக்கு பெண் குரல் இருப்பதால் பாலியல் தீண்டி பார்ப்போமே என்ற எண்ணம் பிறருக்கு தோன்றுகிறது. வடிவேலு சினிமா கதை தான் இங்கு நினைவுக்கு வருகிறது. ஒரு பெண் ஏற்கனவே இரண்டு பேரை வைத்திருக்கிறேன் என்று ஆடவனிடம் கூறினால், கேட்டுக்கொண்டிருக்கும் ஆடவன் மூன்றாவது நபராக மாற நினைக்கிறான்.  பாலியல் வறட்சியாக (பெண்களால் நிராகரிக்கப்பட்டு) துவண்ட, கீச்சுக்குரல் சிறுவனும் அந்த தூண்டலை ஏற்றுக் கொள்கிறான். கீச்சுக்குரல் சிறுவர்கள் பொதுவாக அவர்களது மூத்த சகாக்களால் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள், கெட்டுப்போவார்கள். 
பல கீச்சுக்குரல் ஆண்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள். 
அவர்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவு / ஆண் நிலை, 300ng க்கும் அதிகமாக உள்ளது, ஆனால் அவர்கள் ஓரினச்சேர்க்கையில் மார்பை இழுப்பதால், கின்கோமாஸ்டியாவை (gynecomastia) ஏற்படுத்தும். உடலுறவுக்கும் மார்பை இழுப்பதன் மூலம் உணர்ச்சி ஏற்படுவதற்கும் மூளை ஒரே மாதிரி செயல் படும். பாலுறவு ஹார்மோன் பாதிப்பை ஏற்படுத்தும் என தவறாக புரிய பட்டிருக்கலாம், எழுதப்பட்டிருக்கலாம். மூளைக்கு செயலிலும் நோக்கத்திலும் வித்தியாசம் தெரியாது. மூளையை ஏமாற்றலாம் என்பது அனைவரும் அறிந்ததே. இது மெய்நிகர் உண்மை. நிபந்தனைக்குட்பட்ட அனிச்சை (கண்டிஷனிங் ரிஃப்ளெக்ஸின் பாவ்லோஸ்) கோட்பாட்டிலும் (Pavlov’s theory of classical conditioning) இதைத்தான் கூறுகிறது.
சிறு வயதில் நிகழ்ந்த கொடுமை, அந்த சிறுவரின் வாழ்வில் பின்னாளிலும் கூட மனவுளைச்சலை ஏற்படுத்தக்கூடும். 
சில குழந்தைகள் பெற்றோர்களால் கவனிக்கப்படாமலும், நன்றாகப் பராமரிக்கப்படாமலும் இருப்பதால், அவர்கள் நிராகரிக்கப்பட்டனர். கீச்சிக்குரல் இளைஞன் இவர்கள் நடவடிக்கையிலிருந்து விடுபட வேண்டும் என்று தான் எண்ணுகிறார்கள். ஆனால் திரும்ப திரும்ப தூண்ட படுகிறார்கள்.  கீச்சிக்குரல் இளைஞர்களுக்கும் பெண்கள் கிடைப்பதில்லை. கீச்சிக்குரல் சிறுவர்களை பொட்டை என்று பிற பெண்களும், தான் காதலிக்கும் பெண்கூட ஒதுக்குகிறாள். ஒவ்வொரு முறையும் கீச்சுக்குரல் இளைஞன் ஆண் துணையால் வாய்வழி நெருக்கம் அல்லது குத நெருக்கத்தை விரும்புவதாக அவர்கள் நம்மிடம் கூறுகிறார்கள் (நம்பப்படுகிறது). கீச்சுக்குரல் பையன் உண்மையில் பாலியல் அனுபவங்களை "அதிர்ச்சி" என்று அங்கீகரித்ததாகக் கூற முடியாது, அவை அவனுக்கு மிகவும் விசித்திரமாகத் தோன்றின மற்றும் வேட்டையாடப்படுவதற்கான ஒரு உணர்வை அவனில் விட்டுச் சென்றன. எப்படியிருந்தாலும், சுரண்டல் இந்த பாலியல் அடையாளத்தை "மாற்றுவதில்" குறைந்தபட்சம் ஒரு பங்கைக் கொண்டிருந்தது, ஆனால் தற்செயலாக ஆண், ஆண் காதலாகக் கூட விவாதிக்கப்படலாம். கீச்சுக்குரல் இளைஞன் விடலைப் பருவம் முழுவதிலும்  நிராகரிப்பு மற்றும் பயம் ஆகியவற்றில் கிட்டத்தட்ட ஒவ்வொரு பாலியல் திருப்பத்திலும் கழித்தான். இதனால் அவன் தப்பிக்க முடியவில்லை. திரும்ப திரும்பத் தொடங்கினான். ஆணான கீச்சுக் குரல் ஆடவன் இன்னும் ஒரு ஆடவனிடம் உறவு கொண்டான். தன்னை கட்டாயப்படுத்தி பெண்மைப்படுத்தத் தொடங்கினர். ஆரம்பத்தில் உணர்வுபூர்வமாக பாலியல் தூண்டுதல் எதுவும் இல்லை, இருப்பினும் மூளை அதை ஏற்றுக்கொண்டது. அவனும் அதை ஏற்றுக்கொண் டான்.
ஓரினச்சேர்க்கையாளர்கள் மருத்துவப்பூர்வமான உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். 
இதற்கு சந்தேகத்திற்கு இடமின்றி பல காரணங்கள் உள்ளன, ஆனால் நான் சந்தித்த பலரிடையே ஒரு தொடர்ச்சியான (அனைவரும் ஆண்கள், ஆர்வத்தின் காரணமாக) அவர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் ஆர்வத்தை தூண்டிய காரணத்தை சொல்லப் போகிறேன். ஓரினச்சேர்க்கை X குரோமோசோமுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது, எனவே இது மரபணு தேர்வு, அதாவது உள்ளார்ந்த, ஒரு தேர்வு அல்ல. "வாழ்க்கை முறை தேர்வு". செக்ஸ் மிகவும் சக்திவாய்ந்த உந்துதல். ஒட்டுமொத்தமாக, ஓரினச்சேர்க்கை தேர்ந்தெடுக்கப்பட்டால், மக்கள் அத்தகைய தேர்வை எடுப்பதற்கு மிகவும் தர்க்கரீதியான காரணம், அவர்கள் ஒரே பாலினத்தவர்களிடம் ஈர்க்கப்படுவதுதான் என்றும் கூறுகிறார்கள். மருத்துவப்பூர்வமான உண்மைகள்.
குத துளையில் (ஆசன வாய்) ஒரு இயற்கையான சுருக்கு தசை (ஸ்பிங்க்டர், spincter) உண்டு. , ஆசனவாய் ஒரு திறப்பு அல்ல. ஆணுறுப்பை செலுத்தும் துளை எப்பொழுதும் இறுக்கமாக இருக்கும். அது ஆணுக்கு பேரின்பத்தை கொடுக்கும்.
ஆசன குழாயைப் பாதுகாக்க அல்லது மூடுவதற்குச் சுற்றி தசை வளையம் உண்டு, விந்து வெளியேறுதலைக் (விந்து முந்துதல்) கட்டுப்படுத்தும் வளையமாக செயல் படுகிறது. இது விந்து வெளியேறுவதை தாமதப்படுத்த உதவுகிறது. நேரம் நீட்டிப்பதற்கும் உதவுகிறது. ஆக மொத்தம் நெடுநேர இன்பம் கிடைக்கிறது, மற்றும் அங்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்குறி தண்டினை நெருடிவிடும் (PERISTALSIS) நடவடிக்கை மற்றும் சுருக்கம் தானாக முன்வந்து மேற்கொள்ளப்படுகிறது. கீழ் உணவுக் கால்வாய் ஒரு வெற்றிடக் குழாய் ஆகும். இது குத கால்வாயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்குறி தண்டை உறிஞ்சுவதற்கும், நீளமாக்குதலுக்கும் தூண்டுகிறது.
பின்னர் தன்னை கீச்சுக்குரல் இளைஞன் பெண்மையாக்குவதில், பாலியல் அனுபவம்பெற, இன்பங்களைபெற பரிசோதனை செய்யத் தொடங்குகின்றான். சில கீச்சுக்குரல் சிறுவர்கள் படிப்படியாக பெண்ணாக மாறுகிறார்கள். ஒரு இளைஞன் ஒரு புதிய அடையாளத்தைக் கண்டு பிடித்து விட்டு வெளியேறியவுடன் அவன் மற்ற ஆண்களுடன் வாய்வழி மற்றும் குத நெருக்கத்தை அனுபவிக்கிறான். குத நெருக்கம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, ஏனெனில் இது நெருக்கத்தின் நேரத்தை அதிகரிப்பதற்கான மாற்றத்தை அளிக்கிறது. குத நெருக்கத்தின் செயல்பாட்டின் வழிமுறை பெறும் பாலியல் இன்பம் இரண்டு மடங்குகளாகும்.
கீச்சுக்குரல் பற்றிய தவறான முன் மொழியப்பட்ட கருத்துக்கள்
       கீச்சுக்குரல், ஆண்களின் குறைபாட்டுக்கு பல முன்மொழியப்பட்ட காரணங்கள் உள்ளன,    
   1.கீச்சுக்குரல்  நோயியல் இயற்கையில் கரிம (உயிரியல்) மற்றும் மனோவியல் (உளவியல்) ஆகிய இரண்டு குறை பாடுகள் இருக்கலாம். ஆணின் உருவத்திலும் அதன் இயங்கு தன்மையிலும் எந்த குறை பாடும் கிடையாது.
2.பருவமடையும் போது, ஆண்களின் உடல்கள் டெஸ்டோஸ்டிரோன் என்ற ஆண் இயக்கு நீர் ( Hormone) அதிகமாக உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன, இது குரல் உட்பட உடலின் பல பாகங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தொடக்கத்தில், குரல் பெட்டி என்றும் அழைக்கப்படும் voice box பெரியதாக வளர்கிறது. இந்த நோயாளிகளின் பரிசோதனையில் பிறப்பு உறுப்பு பரிசோதனை உட்பட முழுமையான உடல் பரிசோதனையும் செய்யப்பட்டது. இரண்டாம் நிலை பாலியல் தன்மைகள் மதிப்பீடு  செய்யப்பட்டது. கீச்சுக் குரல் ஆடவனின் உடல் முழுமை பெற்ற ஆணின் உடலாகத் தான் இருந்தது. 100 கீச்சுக்குரல் நபரின் இரத்த ஆண் இயக்கு நீர் அளவு ஆய்வாக சோதித்தோம். அவற்றின் நிலை 310 முதல் 675ng/dl வரை இருந்தது. ஆண்  தன்மைக்கான அளவு சரிசமமாக இருந்தது. ஆகவே கீச்சுக்குரல் உடையோருக்கு ஆண் இயக்கு நீர் குறை இல்லை என்பது நிரூபணம் ஆனது .
3.     14 வயதிற்குள் சிறுவர்களில் பருவமடைவதற்கான (ஹைபோகோனாடிசம்);அறிகுறிகள் ஓர் தாமதமான பருவமடைதல் என்று கருதப்பட்டது. குறை இல்லை.
4.முன் மூளை (hypothalamus/ ஹைபோதாலமஸின்) கருவகவூக்கி இயக்குநீர் வெளியீடு  (Gonadotropin/ கோனாடோலிபெரின்) குறைபாடு  / அல்லது அடினோஹைபோபிசிஸின் கோனாடோட்ரோபின்கள் குறைபாடு என்று கருதப்பட்டது. குறை இல்லை.
5. விரைகளால் ஆண்மையியக்குநீர் (Testosterone டெஸ்டோஸ்டிரோன்) உற்பத்தி யூனுகாய்டிசத்தின் அறிகுறிகள் குறைதல் /.டெஸ்டிகுலர் குறைபாடுகள். (பரம்பரை அல்லது பிறவி (முதன்மை) - ஆண்ட்ரோஜன் உற்பத்தியில் குறைவு மற்றும் பலவீனமான விந்தணு உருவாக்கம் (இரண்டாம் நிலை) - அதிர்ச்சி, வைரஸ் அல்லது பாக்டீரியா அழற்சியுடன்).என்று கருதப்பட்டது. குறை இல்லை.
6. மரபணுமாற்றம், கீச்சுக்குரல்,   குடும்ப வரலாறு காரணமாக இல்லை.
7..இது  வயது கூடக்கூட சரியாகும் என்பது இல்லை. சரியாகாது. 
8. கீச்சுக்குரல் நபர்கள் புத்திசாலிகள் இல்லை,பயந்தவர்கள் என்றனர். சமூகம் இடையூறு செய்யாமல் இருந்தால் அவர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்வார்கள்.
9. இது குரல் பாதையில் உள்ள உடற்கூறியல் மாற்றம் என்றனர். எந்த குறைபாடும் கிடையாது. 
10. இது நரம்பியல் காரணமாக இல்லை. கீச்சுக்குரல்  சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்துகிறார்கள். நரம்பியல் பாதிப்பு இல்லை.
11. கீச்சுக்குரல்  ஏற்படுவதற்கு  பாசமான பெற்றோர்கள் காரணம் அல்ல. கீச்சுக்குரல்  ஒரு நோய் அல்ல, அது ஒரு வாழ்க்கை அனுபவம்.
1 2 எளிதில் குணப்படுத்த முடியாது. அண்ணாக்கு அதிர்வு கையாளுதல் மூலம் எளிதில் குணப்படுத்த முடியும். குரல் மாற்று சிகிச்சை குரல்வளத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கீச்சுக்குரல் ஆண்களின் ஆளுமையையும் மேம்படுத்துகிறது.       
பின்வரும் செய்தி பொதுமக்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
 1. கீச்சுக்குரல் மிகவும்  அதிகமான சமுதாயத்தில் உலகம் முழுவதும் காணப்படும் ஓர் குரல் பிரச்சனையாகும். 2. கீச்சுக்குரல் குணப்படுத்தக்கூடியது. 3. அனைவருக்கும் சிகிச்சை கிடைக்க வேண்டும். 4. இது ஒரு இயக்குநீர் (Hormone/ஹார்மோன்) நோய் மற்றும் அல்ல. குணப்படுத்தியபின் அவர்களின் புதிய பேச்சில் அவர்களின் மூதாதையர் தொனியை (10%) சிலர் உணர்கிறார்கள்.
இத்தகைய உண்மைகளை நம் மக்கள் புரிந்துகொள்வதற்கான சரியான சமயம் இதுதான். ஒவ்வொரு விஷயத்திலும் நாட்டின் முன்னோடி மாநிலமாக இருக்கும் நம் “தமிழகம்” பால் புதுமையினர் விஷயத்திலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, இந்தியாவில் முதல் குரல் கொடுக்கும் முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. வளமான இளைய சமுதாயத்தை, கீச்சுக்குரல்   நிவாரண பணிகளை தெடங்கிவிட்டோம். ஒவ்வொருவரும் திரித்து உணரப்பட்ட /மறைக்கப்பட்ட கீச்சுக்குரல் ஆண்களின் குறைபாட்டை தெரிந்து, அதை குணப்படுத்த வேண்டுமே தவிற அவர்களுக்கு ஆறுதல் தேவையில்லை.
கீச்சுக்குரலுக்கு ஊக்க மருந்து தேவை.வட்டத்தை தாண்டி வான்நோக்கி சிறகடியுங்கள்
          
ஒரு கழுகு ஒன்று மரத்தின் உச்சியில் உள்ள ஒரு கிளையில் முட்டையிட்டு அதனை அடைகாத்து வந்தது. ஒருநாள் உணவுக்காக அது கூட்டை விட்டு வெளியே பறந்த சமயத்தில் அடைகாத்து வைத்திருந்த முட்டைகளில் ஒன்று பலமாக வீசிய காற்றின் காரணமாக மரத்திலிருந்து கீழே விழுந்தது. அதிருஷ்டவசமாக அந்த முட்டை உடையவில்லை. ஏனென்றால் அந்த மரத்தின் அடியில் ஒரு கோழியும் அடைகாத்து வந்திருக்கிறது. இந்த கழுகு முட்டை கோழி முட்டைகள் இருந்த இடத்திற்கு அருகே விழுந்தது ஆனால் முட்டைக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த கோழி மரத்தில் இருந்து விழுந்த முட்டையையும் தன் முட்டை என்று நினைத்து மற்ற முட்டைகளோடு சேர்த்து பக்குவமாக பாதுகாத்தது.
சில நாட்களுக்கு பிறகு மரத்தின் உச்சியில் இருந்த கழுகு தன்னுடைய குஞ்சுகளை அழைத்து கொண்டு வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு பறந்து விட்டது.
அதேசமயம் மரத்தின் அடியில் அடைகாத்த கோழியும் தன் குஞ்சுகளை அழைத்து கொண்டு குப்பைகள் நிறைந்த ஒரு பகுதிக்கு சென்று குப்பையை கிளறி அங்கிருந்த இரையை கொத்தி தின்று கொண்டிருந்தது. கூட்டத்தில் இருந்த கழுகும் மற்ற கோழிகளை போலவே குப்பையை கிளறி  கொண்டிருந்தது. ஒருநாள் வானத்தில் பறந்து கொண்டிருந்த மற்ற கழுகுகளை பார்த்து கோழிகளோடு இருந்த கழுகு இன்னோரு கோழியை பார்த்து கேட்டதாம்
"நம்மளால அவுங்க மாதிரி வானத்துல பறக்க முடியாதா?"
அதற்கு கோழி சொன்னதாம்,
"ஆண்டவன் அவுங்களுக்கு பறக்குற திறமையை கொடுத்திருக்கான். நம்மளால அவ்வளவு உயரத்தில் பறப்பதற்கு வாய்ப்பே இல்ல "
அதற்கு கழுகு கேட்டதாம்,
"நான் வேணும்னா முயற்சி பண்ணி பாக்கவா"
என்று கழுகு கேட்க, அதற்கு கோழி
"உன்னாலயும் என்னாலயும் எப்பவுமே அவுங்கள மாதிரி பறக்க முடியாது. நாம வாழ்க்கை பூரா உணவுக்காக இந்த மாதிரி குப்பையை தான் கிளறிக்கிட்டே இருக்கணும்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தது. கோழி சொன்னது அனைத்தையும் உண்மை என்று நம்பிய கழுகு அதன் பிறகு பறப்பதற்கு முயற்சியே செய்யாமல் தன் வாழ்நாள் முழுவதும் கோழியை போலவே வாழ்ந்ததாம்.
கதையில் சொல்ல வந்த கருத்து: நம்மில் கீச்சுக்குரல் ஆண்கள் பலரும் கழுகை போல பறக்கும் ஆண் குரல் போன்று திறமை கொண்டவர்களாக இருக்கின்றோம் ஆனால் உரிய சந்தர்ப்பத்தில் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்யாமல் இருந்தோமேயானால் கடைசி வரை நம் வாழ்வும் இந்த கதையில் வரும் "கோழியை போல் வாழும் கழுகு போல" ஆகிவிடும். அதற்கு மாறாக வானில் பறக்க மறுத்த குஞ்சியை தயார் செய்து மர உச்சியிலுள்ள கூட்டில் இருந்து பருந்து தள்ளி விடும்.குஞ்சியும் மற்ற கழுகுகளோடு பறக்க ஆரம்பித்துவிடும்
இக்கதையில் உள்ள கருத்து கீச்சுக்குரல் ஆண்களின் செயலை ஒத்து இருக்கிறது. வாருங்கள் நாம் பருந்தாய் வாழ்வெனும் வானில் பறப்போம்.

No comments:

Post a Comment