சில ஆண்களுக்கு, குரல் மாறாமல், பெண்களின் குரலைப் போல், மென்மையாக இருக்கும். இதற்கு, 'பியூபர்போனியா' என, பெயர். இது குறித்து, உலகில் எங்கும், இதுவரை கருத்தரங்கம் கூட நடக்கவில்லை.அந்த குரல் மாற்றத்திற்கு, 'ஹார்மோன்' குறைபாடு எனக்கூறி, பலருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது குறித்து நான், பல நுால்களை படித்தேன். தொல்காப்பியம் நுால், ஒலியைப் பொறுத்தவரை, அடிவயிற்றில் இருந்து புறப்பட்டு, தொண்டை, அண்ணம், நாக்கு, பல், உதடுகளின் வழியாக வெளிப்படுவதாக கூறுகிறது.இதை வைத்து ஆராய்ந்து, அறுவை சிகிச்சை, மருந்து இல்லாமல், பியூபர்போனியா பிரச்னைக்கு, தீர்வு கண்டு உள்ளேன், 517 ஆண்களின், பெண் குரலை சரி செய்துள்ளேன். இதை, உலகம் முழுக்க கொண்டு சென்று, குறைபாடுள்ளவர்களை காப்பாற்ற எண்ணிஉள்ளேன்.
No comments:
Post a Comment