Monday, 29 April 2019


Description: D:\USER\Desktop\ud-logo-desktop.png
பெண் குரலால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு இலவச சிகிச்சை
சிவா .என்.டி. மருத்துவமனை டாக்டர் குமரேசன் ஏற்பாடு
Description: D:\USER\Desktop\700c6368_37162_P_3_mr.jpg
சென்னை ஏப். 28
பெண் குரலால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று சிவா .என்.டி. மருத்துவமனை டாக்டர் குமரேசன் தெரிவித்தார்.
சென்னை சிவா .என்.டி. மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எம். குமரேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு டாக்டர் குமரேசன் அளித்த பதில்களும் வருமாறு :
கேள்வி: டாக்டர் நீங்கள் வெர்ச்சுவல் ரியாலிட்டி என்ற மருந்தில்லா மருத்துவத்தை தொடங்கி, அதை செம்மையாக நடத்துகிறீர்கள். ஆனால் இப்போது பியூபர்போனியா என்ற புது மாதிரியான சிகிச்சையை தொடங்கி இருக்கிறீர்களே? அது என்ன சிகிச்சை?
பதில்: என்னிடம் துரைமுருகன் என்ற வாலிபர் தொண்டை வலி சிகிச்சைக்காக வந்தார். கீச்சுக் குரலில் பேசினார். அவருக்கு பியூபர்போனியா அதாவது பெண் குரல் இருப்பதைக் கேட்டு எளிய சிகிச்சை அளித்து ஆண் குரலாக மாற்றினேன்.
கேள்வி: பியூபர்போனியா சிகிச்சையில் ஆர்வம் மேம்பட காரணம் என்ன?
பதில்: பெண் குரலால் அவதிப்படும் இளைஞர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களுக்கு சிகிச்சையளித்து ஆண் குரலாக மாற்றியமைத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு.
கேள்வி: ஒரு இலக்கை நோக்கி செல்வதாகச் சொல்கிறீர்கள். அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
குரல்வள பயிற்சி
பதில்: பியூபர்போனியாவுக்கு என்ற தனி சிகிச்சை பிரிவை தொடங்கியிருக்கிறேன். அதற்கென பயிற்சியாளர்களை நியமித்து, குரல்வளப் பயிற்சி அளித்து வருகிறேன்.
கேள்வி: பியூபர்போனியா சிகிச்சையை பிரபலப்படுத்த நீங்கள் எடுத்த முயற்சிகள் என்ன?
பதில்: பத்திரிகைகளில் பியூபர்போனியா பற்றிய எனது பேட்டி பிரபலமானது. தொடர்ச்சியாக, தொலைக்காட்சிகளில் பியூபர்போனியா சிகிச்சை பற்றி பேசினேன். அகில இந்திய வானொலியிலும் பேசினேன். அது ஓரளவு பயன் தந்தது.
கேள்வி: சரி இந்தியா முழுவதும் இதை கொண்டு செல்ல என்ன மாதிரி நடவடிக்கையில் இறங்கினீர்கள்?
பதில்: எனது மகன் .என்.டி. டாக்டர் நவீன் குமரேசன் யூ டியூப் மூலம் இதை பிரபலப்படுத்தலாம் என்று பெரும் முயற்சி எடுத்து அதனடிப்படையில் வாரந்தோறும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை பியூபர்போனியா பற்றியும் அதன் சிகிச்சை முறை பற்றியும் பேசினேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. நம் தமிழ்நாடு மட்டுமல்ல அண்டை மாநிலம், வட மாநிலம் என பியூபர்போனியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் வருகிறார்கள்.
கேள்வி: யூ டியூப் பார்த்து தான் அவர்கள் வருகிறார்களா?
பதில்: நிச்சயமாக ... வடமாநிலத்தவர்களில் இந்தி பேசுபவர்கள் யூடியூபில் நான் பேசியதை கேட்டு தான் வந்தார்கள்.
வடமாநிலத்தவர்
கேள்வி: வடமாநிலத்தில் இல்லாத சிகிச்சை உங்களிடம் கிடைக்கிறதா?
பதில்: சரியான கேள்வி. அங்கு சில டாக்டர்களிடம் சிகிச்சைக்கு போயிருக்கிறார்கள். 3 மாதம், 6 மாதம் என சிகிச்சை பெற்றும் பயிற்சி எடுத்து பலன் இல்லாததால் இங்கே வந்து இருப்பதாக சொல்கிறார்கள்.
15 நிமிடத்தில்...
கேள்பி: மற்ற டாக்டரிடமில்லாத புது மாதிரி சிகிச்சை என்ன?
பதில்: சிகிச்சை முறையை விளக்கி சொல்ல அவசியமில்லை. சரியாகிறதா? அதுதான் முக்கியம். 15 நிமிடத்தில் ஆபரேஷன் இல்லாத சிகிச்சை அளிக்கிறேன். எடுத்த எடுப்பிலேயே குரல் மாறுகிறது. அதோடு விட்டால் மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பி விடும். அதனால் 21 நாட்கள் பயிற்சி கொடுக்கிறோம். அதற்கான உபகரணங்களும் சிகிச்சை பெறுபவர்களுக்கு அளிக்கிறோம். பயிற்சி பெற்றால் வாழ்நாள் முழுதும் ஆண்குரல் அப்படியே நீடிக்கும்.
கேள்வி: சிலர் பெண் குரலுக்கு பயந்து கல்விக் கூடத்துக்கு போக மறுக்கிறார்கள். மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். குரலால் வேதனைப்படுகிறோம் என்றும் சொல்கிறார்கள். அவர்களுக்கு உங்களது சேவை என்ன?
பதில்: மாணவர்கள், இந்தியாவின் எதிர்கால தூண்கள். அவர்கள் சமுதாயத்தில் மற்றவர்களைப் போல வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த எண்ணத்தின் விளைவே, அவர்களுக்கு (மாணவர்களுக்கு) இலவசமாக பியூபர்போனியா சிகிச்சை அளிக்கிறேன். வருகிறார்கள். சிகிச்சை பெற்று கல்விக்கூடம் போகிறார்கள்.
கேள்வி: இதுவரை எத்தனை பேர் சிகிச்சை பெற்றார்கள்?
பதில்: இதுவரை 400 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளேன். இதில் மாணவர்கள் 100 பேர்.
கேள்வி: மாணவர்களுக்கு இலவச சிகிச்சை என்று சொல்லியிருக்கிறீர்களே? இப்போது கோடை விடுமுறை. மாணவர்கள் அதிகம் வந்தால் சிகிச்சை அளிக்க முடியுமா?
பதில்: கண்டிப்பாக எவ்வளவு பேர் வந்தாலும் இலவச சிகிச்சை தான். அதற்கேற்ப விரிவான ஏற்பாடுகள் செய்து வைத்துள்ளேன். அதற்கு தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு டாக்டர் எம் குமரேசன் பேட்டி அளித்தார்.


No comments:

Post a Comment